பொதுத் துறை வங்கிகளில் விரைவில் விருப்ப ஓய்வுத் திட்டம்? 
தற்போதைய செய்திகள்

பொதுத் துறை வங்கிகளில் விரைவில் விருப்ப ஓய்வுத் திட்டம்?

பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் விருப்ப ஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் விருப்ப ஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரைக்கேற்ப இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாகவும் இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு இடையே இதேபோன்ற விருப்ப ஓய்வுக்கான பரிந்துரைகளை ஏர் இந்தியா மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கும் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. இதுபற்றித் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

ஊழியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே நிர்வாக மாற்றம் எளிதாக இருக்கும் என்றும் நிதியமைச்சக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

அதிகளவிலானோர் விரும்பி வெளியேறும் வகையில் மத்திய அரசு அறிவிக்கும் விருப்ப ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2021-22 நிதிநிலை அறிக்கையில் இரு பொதுத் துறை வங்கிகளையும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்கும் பணியை அரசு தொடங்கவுள்ளதாக நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT