முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படாது: கலால் துறை

புதுவையில் மதுக்கடைகள் மூடப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவலை நம்ப வேண்டாம் என்று, கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படாது
பகிர்:


புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவலை நம்ப வேண்டாம் என்று, கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடு தளர்வின் காரணமாக, ஜூன் 8 முதல் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுச்சேரிக்கு அதிகளவில் வருவதால், மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக,  சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரவுகிறது.

இதனை நம்ப வேண்டாம்; மதுக்கடைகளை மூட கலால் துறை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று, புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.