தற்போதைய செய்திகள்

உலகளவில் கரோனா உயிரிழப்பு 37.88 லட்சத்தைத் தாண்டியது

DIN


உலகளவில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 37,88,704 -ஆக உள்ள நிலையில்,  தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 கோடியே 56 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 17,56,18,683 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,88,704 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 15,91,54,090  பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 1,26,75,889 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 84,602 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தொற்று பாதிப்பும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்‍கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,42,75,783 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 6,14,007 -ஆக உள்ளது. 

இதேபோல், இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்‍கி, இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT