ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: 40 மாணவிகள் பலி
ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 மாணவிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 மாணவிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது இஸ்ரேல் - அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவத்தில் 40 மாணவிகள் பலியானதாக அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனமான 'இர்னா' தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர். மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம் அமைந்துள்ளது. இந்தத் தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது.
The death toll in an Israeli-US strike on a girls’ school in southern Iran rises to at least 40, the state-run IRNA news agency reported.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.