முகப்பு
தற்போதைய செய்திகள்

புழல் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை: பூமி பூஜை எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கி வைப்பு

புழல் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கி வைத்தார்

Updated On : 16 ஜூன், 2021 at 12:51 PM
புழல் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை தொடங்கி வைத்த எம்எல்ஏ சுதர்சனம்.
பகிர்:

மாதவரம்: புழல் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ சுதர்சனம் தொடங்கி வைத்தார்.

சென்னை மாதவரம் அடுத்த புழல் பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரிப்பதன் காரணமாக புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்த பூஜைக்கு மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் சுதர்சனம் தலைமை தாங்கினார்.

Advertisement

அரசு பள்ளி வளாகத்தில் கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. இதற்காக எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பூஜையின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.