தற்போதைய செய்திகள்

குஜராத்: தடுப்பூசி குறித்து எதிர்ப்பு செய்தியை பரப்பியதற்காக எட்டு பேர் கைது

DIN

வதோதரா: குஜராத்தின் வதோதராவில் கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு செய்தியை, பொதுமக்கள் மத்தியில் பரப்பியதாக இரண்டு பெண்கள் உள்பட 8 பேர் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரோனா தடுப்பூசிக்கு எதிராக செய்தி பரப்புவதற்ககாக, 'விழித்தெழுங்கள்' என்ற பதாகைகளுடன் 'விழித்தெழு குஜராத் இயக்கம்' சார்பில்  எட்டு பேர் அடங்கிய குழு ஒன்று கூடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்

கரோனா தடுப்பூசிக்கு செலுத்த நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு பிரசாரத்தை நடத்தி வரும் நிலையில், முகக்கவசம் அணியாமல் தடுப்பூசிக்கு எதிரான செய்திகளை பரப்புவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கூடியிருப்பவர்களை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் இந்திய தண்டனைச் சட்டத்தின் அரசின் உத்தரவை பின்பற்றாமை, உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவுதல் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும்  மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் எதிராக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் அவர்களை கைது செய்தனர்.

பிரதமர் நரேந்திர மேடி, தனது மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், தடுப்பூசி பற்றிய எதிர்மறையான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வோம். கரோனா நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடிப்போம் என்று வலியுறுத்தியுள்ள நிலையில், அவருடைய சொந்த மாநிலத்தில் கரோனா தடுப்பூசிக்கு எதிர்மறையான அவதூறு பரப்பி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களக்காடு கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சாரங்கபாணி கோயில் ஹேமரிஷி மண்டபத்தில் குடமுழுக்கு

மருத்துவ நட்சத்திரம் விருது

நெல்லை காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்

மேலப்பாளையத்தில் கண் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT