மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,706 கன அடியாக குறைந்தது
மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 1,706 கன அடியாக குறைந்தது.
மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 1,706 கன அடியாக குறைந்தது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் காவிரியில் வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை காலை 2,030 கன அடியாக இருந்த நீா்வரத்து சனிக்கிழமை 1,706 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 97.93 அடியாக இருந்த மேட்டூா் அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 97.97 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 62.24 டி.எம்.சியாக உள்ளது.
Advertisement
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.