மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பாதிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து இஸ்ரேல் தமது வான்வெளியைப் பொது விமானப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ உள்பட முக்கிய விமான சேவைகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படவில்லை.
துருக்கிஷ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ், ஐபீரியா எக்ஸ்பிரஸ், ஜெர்மனியின் லுஃப்தான்ஸா, ஹங்கேரியின் விஸ் ஏர், ஃப்லை துபை, ஓமன் ஏர், டச்சு நாட்டின் கேஎல்எம் உள்பட முக்கிய விமான சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
விமான சேவை குறித்த அண்மைத் தகவல்களை அந்தந்த விமான நிறுவனங்களின் இணைய வலைதளங்களிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பார்த்து பயணிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Air India has suspended all its flights to destinations across the Middle East
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.