அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: முதல்வர்
அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அம்மாநில முதல்வர்
சர்பானந்தா சோனோவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
காலை 11.30 மணி நிலவரப்படி பாஜக 84 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
அசாமில் 126 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அஸ்ஸாமில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.