முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,567 கன அடியாக குறைந்தது

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 1,567 கன அடியாக குறைந்தது.

Updated On : 2 மே, 2021 at 8:37 AM
மேட்டூர் அணை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:38 AM

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 1,567 கன அடியாக குறைந்தது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் காவிரியில் வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. சனிக்கிழமை காலை 1,706 கன அடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 1,567 கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை 97.97 அடியாக இருந்த மேட்டூா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை  98.00 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 62.27 டி.எம்.சியாக உள்ளது.

Advertisement

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.