முகப்பு
தற்போதைய செய்திகள்

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்ய ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருத்துகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துதார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருத்துகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துதார். 

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.  

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதி படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஸ்டான்லி மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடம் கரோனா சிகிச்சை பிரிவாக மாற்றப்படும்.

வருகிற 15 -ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும் .

சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருத்துகளை விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். 

தற்போது மதுரையில் ரெம்டெசிவிர் மருத்துகள் விற்பனை தொடங்கப்படுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →