தற்போதைய செய்திகள்

திருநங்கையரும் பேருந்தில் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பெண்களைப் போலவே திருநங்கையரும் பேருந்தில் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN


சென்னை: பெண்களைப் போலவே திருநங்கையரும் பேருந்தில் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நேற்று வெள்ளிக்கிழமை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் கோப்பில் கையெழுத்திட்டார். 

இந்த உத்தரவு உடனடியாக இன்று  காலை முதலே தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. 

"மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை"  என்ற ஸ்டிக்கர்களும் இன்று பெரும்பாலான பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்துஜா ரகுநாதன், பெண்களுடன் திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்" என்று ஸ்டாலினை டேக் செய்து சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சுட்டுரை பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கருணாநிதி காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.

தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.

பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT