புதுவையில் ஒரே நாளில் 1,237 பேருக்கு கரோனா: 26 பேர் பலி
புதுச்சேரியில் ஒரே நாளில் 1,237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 26 பேர் உயிரிழந்தனர்.
புதுச்சேரியில் ஒரே நாளில் 1,237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 26 பேர் உயிரிழந்தனர்.
புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதுச்சேரியில் 915 நபர்களுக்கும், காரைக்காலில் 222 நபர்களுக்கும், மாஹேவில் 25 நபர்களுக்கும் , ஏனாமில் 75 நபர்கள் என மொத்தம் 1,237 நபர்கள் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதுச்சேரியில் 23 நபர்களும், காரைக்காலில் 3 நபர்களும், என 26 நபர்கள் கரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,408 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் சிகிச்சை பெற்று திரும்பியவர்கள் 1,571பேர். மேலும் 15,475 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 81,336 நபர்கள் குணமடைந்துள்ளனர்.
மாநிலத்தின் மொத்த பாதிப்பு 98,219 ஆக உள்ளது. இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 940 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.