தற்போதைய செய்திகள்

கரோனா: மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் காலமானார்

DIN

மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் கரோனா நோய்த் தொற்று காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி அதிகாலை காலமானார்.

இடதுசாரி சிந்தனையாளரும் ''கம்யூனிசம் நேற்று-இன்று-நாளை'' என்ற நூலின் ஆசிரியருமான ஜவஹர், எண்ணற்ற இளம் பத்திரிகையாளர்களுக்குத் தூண்டுகோலாக இருந்துள்ளார். 

ஜவஹர் மறைவு குறித்து எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில்,  மாவோ கூறினார், “ சாவு எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தேரும். ஆனால் தன்மையில் வேறுபாடுகள் உண்டு. ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களுக்காக வாழ்ந்து மடிபவர்களின் சாவு "தாய் (இமய) மலை”யைவிடக் கனமானது. ஒடுக்குவோருக்கும் சுரண்டுவோருக்கும் வாழ்பவர்களின் சாவு பறவையின் சாவைவிட இலேசானது”. தோழர் ஜவகர் முதல் வகையைச் சேர்ந்தவர்; அதானல்தான் அவரது இறப்பு  மலையைவிடக் கனமானதாகத் தோன்றுகிறது. எனினும் கடந்த 4 ஆண்டுகளாக அவர் அனுபவித்து வந்த வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் அவருக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்பது நமக்கு சற்று ஆறுதல் அளிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT