முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒபாமா விரைவில் கரோனாவில் இருந்து குணமடைய மோடி வாழ்த்து

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கரோனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
கோப்புப்படம்
பகிர்:


அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கரோனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாள்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த ஒபாமாவுக்கு தொற்று பரிசோதனை செய்ததில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது ஒபாமா நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கரோனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், நீங்கள் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவில் குணடைந்து வரவும், உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.