தற்போதைய செய்திகள்

நிலவுக்கு அனுப்பப்பட இருந்த ஸ்லிம் விண்கலத்தை நிறுத்தி வைத்தது ஜப்பான்!

இந்தியாவை அடுத்து நிலவில் தரையிறக்க முயற்சிக்கும் நோக்கில் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் திங்கள்கிழமை காலை ஏவப்பட இருந்தது, இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது என்று ஜப்பான் விண்வெள

DIN

டோக்கியோ: இந்தியாவை அடுத்து நிலவில் தரையிறக்க முயற்சிக்கும் நோக்கில் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் திங்கள்கிழமை காலை ஏவப்பட இருந்தது, இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எதிர்கால ஆய்வுக்கு உதவும் வகையில் நிலவில் ஆய்வு செய்வதற்கான ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் உருவாக்கியது. இந்த விண்கலம் நிலவில் பாறைகளை ஆராய்வது மற்றும் விண்கலத்தை துல்லியமாக தரையிறங்கும் நடைமுறைகளைக் காண்பிப்பதற்காக 200 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் பிளாஸ்டிக் சோலார் பேனல், மிக நுண்ணிய கேமராக்கள், நேனோ டெக்னாலஜியால் சுருக்கப்பட்ட மின்னணு பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்த ஆய்வு வெற்றியடைந்தால் நிலவில் ஆய்வு விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய உலகின் ஐந்தாவது நாடாக ஜப்பான் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 9:26 மணியளவில், ஜப்பானின் தென்மேற்கில் உள்ள ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஸ்லிம் விண்கலம் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது, இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியதால், இந்தியா ஒரு மாபெரும் வெற்றியைக் கண்டது, இது வரலாற்று சாதனையை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது.

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா உருவானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT