வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது தங்கத்தின் விலை. சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.46,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய செய்திகள்வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது தங்கத்தின் விலை. சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.46,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வரலாறு காணாத விலையேற்றத்தை கண்டுள்ளது தங்கத்தின் விலை. சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.46,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி, சென்னையில் வியாழக்கிழமை ஒரு பவுன் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ரூ. 46,000-க்கு விற்பனையானது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.5,750-க்கும், பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.46,000-க்கும் விற்பனையானது.
அதேபோன்று வெள்ளி விலை சற்று குறைந்து ஒரு கிராம் ரூ.50 காசுகள் குறைந்து ரூ.80.20-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.80,200-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.5,775-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,200-க்கும் விற்பனையானது.
அதேபோன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.90 காசுகள் அதிகரித்து ரூ.83.70-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.900 அதிகரித்து ரூ.83,700-க்கும் விற்பனையாகிறது.