தற்போதைய செய்திகள்

புதைபடிவுகளிலிருந்து எரிபொருள் எடுக்க அனுமதியா? லண்டனில் ஓவியம் உடைப்பு!

இணையதள செய்திப்பிரிவு

லண்டனிலுள்ள தேசிய அருங்காட்சியகத்துக்குள் புகுந்து புகழ்பெற்ற ஓவியர் டீகோ விலாஸ்க் ஓவியத்தின் பாதுகாப்புக் கண்ணாடியை உடைத்ததாக இரு பருவநிலை மாற்ற போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இவர்கள் இருவரும் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து ‘வீனஸின் குளியறை’ என்ற புகழ்பெற்ற ஓவியத்தை சுத்தியல்களால் உடைத்தனர்.

இதில் அந்த ஓவியத்தின் பாதுகாப்புக் கண்ணாடிச் சட்டகம் உடைந்தது. பல இடங்களில் கண்ணாடியில் ஓட்டைகளும் விழுந்துவிட்டன.

‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ என்ற இந்த அமைப்பினர் ஏற்கெனவே இதேபோன்று புகழ்பெற்ற கலைப் பொருள்களையும் அரசு கட்டடங்களையும் இலக்காகக் கொண்டு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பிரிட்டனில் புதைபடிவுகளைக் கண்டறிந்து எரிபொருள் எடுக்க அனுமதிக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவர்கள் இந்தப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட ஓவியம் பின்னர் பரிசோதிப்பதற்காக அகற்றப்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

நாகை எம்பி எம்.செல்வராசு காலமானார்

யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT