தீப்பற்றிய ரயில் பெட்டியைச் சூழ்ந்து நிற்கும் பயணிகள் 
தற்போதைய செய்திகள்

கான்பூர் நகர் அருகே ரயிலில் தீ! பெரும் புகை!!

உத்தரப் பிரதேசத்தில் காஸ்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று  வியாழக்கிழமை மாலையில் திடீரென தீப்பற்றியது.

DIN

உத்தரப் பிரதேசத்தில் காஸ்கஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் இன்று  வியாழக்கிழமை மாலையில் திடீரென தீப்பற்றியது. நல்லவேளையாக யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை.

கான்பூர் நகர் மாவட்டத்தில் உத்ரிபுர - பில்ஹர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று மாலை திடீரென பொதுப் பெட்டியொன்றில் திடீரென பெரும் புகை ஏற்பட்டது.

தீப்பற்றியதாகவும் வெறும் புகை மட்டுமே என்றும் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயிலின் பிரேக் அமைப்பில் நேரிட்ட கோளாறு காரணமாக உராய்வு ஏற்பட்டதால் புகை தோன்றியதாக ரயில்வே வட்டாரங்கள்  தெரிவித்தன.

பிரேக் அமைப்பு சீர் செய்யப்பட்ட பின் ரயில் புறப்பட்டுச் சென்றதாகவும் தீப்பிடிக்கவில்லை என்றும் இந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT