தற்போதைய செய்திகள்

அருண் விஜய் 36 படத்தின் பூஜை விடியோ!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரது 36 படத்தின் பூஜை விடியோ வெளியாகியுள்ளது.

DIN

முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமனவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார்.

அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை அளித்தது. பின்னர் தடம், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

கடைசியாக, அருண் விஜய் நடிப்பில் வெளியான இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய மிஷன் சேப்டர்-1 ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படமும் சிறப்பான வரவேற்பினைப் பெற்றது.

பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் படத்தில் திரைப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது.

அருண் விஜய் 36 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப். 4 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரது 36 படத்தின் பூஜை விடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT