தொடங்கியது பாக்கெட் நாவல் படத்தின் படப்பிடிப்பு!
நடிகர் விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படம் குறித்து...
நடிகர் விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்.17) தொடங்கியது.
இந்தப் படத்தை தேசிய விருது வென்ற தியாகராஜா குமாரராஜா இயக்குகிறார்.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
முதல்முறையாக தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். ஏற்கெனவே, மாடர்ன் லவ் என்ற இணையத் தொடரில் இளையராஜா இவருடன் பணியாற்றி இருக்கிறார்.
தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் (TDKF) மூலம் பாக்கெட் நாவல் படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
போஸ்டர் வெளியீட்டில் கதை, திரைக்கதை ஆண்ட்ரூ லூயிஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்ட்ரூ தமிழில் லீலை, கொலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களையும் வதந்தி என்கிற இணையத் தொடரையும் இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.