நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே தண்ணிலாப்பாடியில் புதன்கிழமை ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீ மளமளவென அருகில் இருந்த வீடுகளுக்கு பரவியதில் 6 வீடுகள் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மிகுந்து போராட்டத்திற்கு மத்தியில் மற்ற வீடுகளுக்கு தீ பரவமால் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமானது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை.
தீ விபத்து குறித்து போலீீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.