தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு  
தற்போதைய செய்திகள்

ரூ.55,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

DIN

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.54,440 ஆக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஆக உயர்ந்த நிலையில், ஏப்ரல் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.12) மீண்டும் புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 உயா்ந்தது.

கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805-க்கும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1.50 காசு உயர்ந்து ரூ.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,500 உயர்ந்து ரூ.90.000-க்கும் விற்பனையாகிறது.

பணவீக்கம், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணிகளால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

சட்டவிரோத பந்தைய செயலி வழக்கு: யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சோனு சூட்டுக்கு சம்மன்

பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட 1,300 பொருள்கள் ஏலம்

சைவ, வைணவம் குறித்த சா்ச்சைப் பேச்சு: பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT