தற்போதைய செய்திகள்

சேலத்தில் இபிஎஸ் வாகனப் பேரணி!

சேலத்தில் இபிஎஸ் வாகனப்பேரணி மூலம் வாக்கு சேகரித்தார்.

DIN

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று (ஏப். 17) மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

இதையடுத்து, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகளின் தலைவா்களும், வேட்பாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் தலைவா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், சேலத்தில் வாகனப் பேரணி மூலம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

ஏற்காடு பிரதான சாலை அஸ்தம்பட்டி சந்திப்பில் இருந்து சேலம் நகரப் பகுதி வரை திறந்த வாகனத்தில் இபிஎஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT