முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

Updated On : 20 ஏப்ரல், 2024 at 1:50 PM
பகிர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் தில்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று விளையாடுகின்றன. தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அவற்றில் 4 வெற்றி மற்றும் 2 இல் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

தில்லி அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று 4ல் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணி மொத்தம் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →