தற்போதைய செய்திகள்

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

மெட்டி ஒலி தொடர் இயக்குநர் திருமுருகன் இயக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி, நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு உள்ளிட்ட வெற்றித் தொடர்களை இயக்கியவர் இயக்குநர் திருமுருகன்.

இவர் 2002ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' தொடரில் கோபி பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். மெட்டி தொடர் கரோனா காலத்தில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டபோதும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவர் சின்னத்திரையை தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் தனது வெற்றியைப் பதிவு செய்தார். நடிகர் பரத் நடிப்பில் உருவான 'எம்-மகன்' திரைப்படத்தை இயக்கி, தமிழக அரசின் விருத்தைப் பெற்றார். மீண்டும் பரத்துடன் இணைந்து 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' என்ற படத்தை இயக்கினார்.

இதனிடையே திருமுருகன் இயக்கிய குறும்படங்கள், யூடியூப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

இந்த நிலையில், இயக்குநர் திருமுருகன் புதிய தொடரொன்றை இயக்கவுள்ளதாக, அவரின் யூடியூப் சேனாலான திரு டிவியின் மூலம் அறிவித்துள்ளார்.

இயக்குநர் திருமுருகனின் புதிய தொடர் அறிவிப்பு, மெட்டி ஒலி தொடரின் இரண்டாம் பாகமாக இருக்குமா அல்லது புதிய யூடியூப் தொடராக இருக்குமா என்று அவரின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT