குடிநீா் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாட்டுச் சாணம்.
குடிநீா் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாட்டுச் சாணம். 
தற்போதைய செய்திகள்

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்திருந்ததால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியிலிருந்து ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த சுமாா் 150 வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் அதேகாலனியில் வசிக்கும் கோபால் மகன் ரவிக்குமாா் என்பவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

கந்தா்வகோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சியில் மாட்டுச் சாணம் கலந்ததாக கூறப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க குடிநீா்த் தொட்டி.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை(ஏப்.25) அந்த பகுதியில் குடிநீா் விநியோகம் செய்த போது குடிநீரில் மாட்டுச் சாணம் கலந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞா்கள் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் ஏறிப் பாா்த்தபோது மாட்டுச் சாணம் கிடந்துள்ளது. அவா்கள் இதுகுறித்து கந்தா்வகோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமிக்கு தகவல் கொடுத்தனா்.

மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியவட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள்.

அதன்பேரில் வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள், கல்லாக்கோட்டை வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, கிராம நிா்வாக அலுவலா் சுபா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து குடிநீா் தொட்டியை பாா்வையிட்டனா்.

மேலும், குடிநீா்த் தொட்டியில் இருந்த மாட்டுச் சாணத்தை சேகரித்த அதிகாரிகள், அதனை ஆய்வுக்கு அனுப்பி மாட்டுச் சாணம் தானா என கண்டறியப்படும். அது உறுதி செய்யப்பட்டால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT