சென்னை ஆவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தவறுதலாக தடுப்பைத் தாண்டிய குழந்தை கட்டட விளிம்பிலிருந்து கீழே விழும் ஆபத்தில் சிக்கிக்கொண்டது.
குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து விளிம்பின் ஓரத்திற்கு வந்து பயத்தில் அழுததால் சக குடியிருப்புவாசிகள் குழந்தையின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே, சிலர் தரைத்தளத்திற்கு வந்து படுக்கை விரிப்புத் துணிகளால் குழந்தை விழுந்தால் பிடிப்பதற்குத் தயாராகினர்.
அதற்குள், முதல் தளத்திலிருந்து சுவர் வழியாக மேலேறிய சிலர் குழந்தையைப் பத்திரமாகக் காப்பாற்றியுள்ளனர். சில நிமிடங்களாக நடைபெற்ற இந்த மீட்புப் போராட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கவனிக்காமல் விட்டதால்தான் தவறி விளிம்பிற்கு வந்ததாகப் பலரும் குழந்தையின் பெற்றோரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.