அகஸ்தியம்பள்ளி நினைவு தூண் அருகே உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ்  கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள்  அமைச்சர்  கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி, பி.வி. ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார். 
தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 93-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

வேதாரண்யம்:வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 93-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை   நடைபெற்றது.

அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள நினைவு தூண் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் யாத்திரை குழுவினர், காங்கிரஸார் பங்கேற்றனர்.

உப்புக்கு வரிவிதித்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930, ஏப்ரல் 30 ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. சர்தார் வேதரத்னம் போன்றோர் போராட்டம் வெற்றி பெற பெரும் பங்காற்றினர்.

இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30 ஆம் நாள் உப்பு அள்ளி,மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.

நிகழாண்டில், அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு தூண் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி, பி. வி. ராசேந்திரன் தலைமை வகித்தார்.

காங்கிரஸ்  கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள்  அமைச்சர்  கே.வி.தங்கபாலு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பலத்த மழை: பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித் துறை உத்தரவு

2025 ஃபிடே உலகக் கோப்பை செஸ் இலச்சினை அறிமுகம்

லாரா அபாரம்; லஸ், காப் அசத்தல்: தென்னாப்பிரிக்கா 312/9

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தாவிட்டால் ‘கூடுதல் வரி’: இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

பிரதமா் மோடியை சந்தித்து தில்லி முதல்வா் தீபாவளி வாழ்த்து

SCROLL FOR NEXT