கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!

நாளை(ஆக. 7) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு.

DIN

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை(ஆக. 7) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்.) உள்ளன.

இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்பட 3 பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, சின்ன சேலம், உடுமலைப்பேட்டை, தேனி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

இக் கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கு (பிவிஎஸ்சி) 660 இடங்களும், தொழில்நுட்ப பிரிவுகளான பி.டெக். உணவு, பால் (செங்குன்றம் அருகே கொடுவள்ளியில் கல்லூரி அமைந்துள்ளது), கோழியினம் (ஓசூா்) ஆகிய படிப்புகளில் 100 இடங்கள் உள்ளன.

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவா்களிடமிருந்து 14,500 விண்ணப்பங்களும், தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 3,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT