அண்ணன் - தங்கை பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் தொடரான வானத்தைப் போல சீரியல் நிறைவடைகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 8.30 மணிக்கு வானத்தைப் போல தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2020 டிசம்பர் முதல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடர் சின்னத்திரைகளுக்கான டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முன்னணி இடத்தில் நீடித்து வருகிறது. அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், திருமணம் ஆன பிறகு அண்ணன், தங்கை உறவு சந்திக்கும் பிரச்னைகளே இத்தொடரின் மையக் கருவாக உள்ளது.
முன்னதாக இந்தத் தொடரில் இருந்து துளசியாக நடித்த ஸ்வேதா வெளியேறினார். அவருக்கு பதிலாக பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மான்யா நடித்து வருகிறார். இந்தத் தொடரில் சின்ராசுவாக நடித்த தமன் வெளியேறியதால், தற்போது ஸ்ரீ குமார் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வானத்தைப்போல தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இத்தொடர் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தரி சீரியல் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வானத்தைப் போல தொடரும் முடிவடையவுள்ளது சின்னத்திரை ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானத்தைப் போல தொடர் நிறைவடைவதால், இத்தொடர் ஒளிபரப்பான நேரத்தில் ஈரமான ரோஜவே தொடர் நாயகி ஸ்வாதி நடிக்கும் புதிய தொடரான மூன்று முடிச்சு சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.