மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட வழக்கில் ‘பிரியாணி மேன்’ என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்த அபிசேக் ரபி என்பவரை சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, சென்னை தேனாம்பேட்டை பகுதியைத் சோ்ந்த இளம்பெண் ஒருவா், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், தான் தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டு வரும் செம்மொழி பூங்கவையும் அதன் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், ஆபாசமான உடல்மொழி சைகைகளை விடியோ பதிவு செய்து அதை பிரியாணி மேன் எனும் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வரும் அபிசேக் ரபி என்பவா் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை தெற்கு மண்டல கணினிசாா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தார்.
இதன்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அபிஷேக் ரபியை (29) கைது செய்தனா்.
இந்த நிலையில், யூடியூபர் அபிசேக் ரபி மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை காவல் துறையின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட அபிஷேக் ரபி என்பவரை சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.