முகப்பு
தற்போதைய செய்திகள்

வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்துக்கு... தாம்பரத்தில் - திருச்சி முன்பதிவில்லா ரயில்!

இன்று(ஆக. 9) இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லா ரயில்.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 7:16 PM
கோப்புப்படம்
பகிர்:

வெளியூர் செல்லும் பயணிகளின் வசதியாக தாம்பரத்தில் இருந்து முன்பதிவில்லா ரயில் இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வார இறுதியில் சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக இன்று(ஆக. 9) இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் முன்பதிவில்லா இந்த மெமு சிறப்பு ரயில் நாளை காலை 6.40க்கு திருச்சியை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் மறுவழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 11) இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, பண்ருட்டி, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.