தங்கம் அதிரடி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மேலும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ. 51,400-க்கு விற்பனையாகிறது.
தற்போதைய செய்திகள்தங்கம் அதிரடி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மேலும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ. 51,400-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மேலும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ. 51,400-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,360-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
இதனிடையே மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,300 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளயின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டு உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200-க்கும், புதன்கிழமை மேலும் கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.6,330-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 50,800-க்கும், ஒரு கிராம் ரூ. 6,350-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை மேலும் தங்கம் விலை உயர்ந்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ. 75-ம், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.51,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 6,645-க்கு விற்பனையாகிறது.
அதுபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து ரூ.88-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,500 உயர்ந்து ரூ.88,000-க்கும் விற்பனையாகிறது.