முகப்பு
வணிகம்

தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்வு

தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து விற்பனையாகிறது.

Updated On : 28 பிப்ரவரி 2026, 9:38 am IST
தங்கம் விலை உயர்வு  - File photo
பகிர்:

சென்னையில் வார இறுதி நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.300 உயர்ந்து ரூ.15,200க்கு விற்பனையாகிறது.

அதுபோல, தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,21,600க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரு.16,582 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,32,656 ஆகவும் உள்ளது.

Advertisement

Advertisement

வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,00,000க்கு விற்பனையாகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14,900 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.300 உயர்ந்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கம் முதலே தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.

பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.180 உயர்ந்து ரூ.14,860 ஆக இருந்தது. அது முதலே விலை உயர்வானது 100 ரூபாய்க்குள் நாள்தோறும் ஏற்றம் இறக்கத்தோடு காணப்பட்டு பெரிய அளவில் அதிர்ச்சி கொடுக்காமல் இருந்த நிலையில், வாரத்தின் இறுதியில் ரூ.300 உயர்ந்து கிராமுக்கு ரூ.15 ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது.

பத்து நாள்களுக்கும் மேல் ரூ.15 ஆயிரத்துக்குக் கீழே இருந்த தங்கம் விலை இன்று மீண்டும் ரூ.15 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

summary

Gold prices are rising by Rs. 300 per gram.

மேலும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.