புதுச்சேயிரில் பள்ளி களுக்கு இன்று விடுமுறை (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் இடைவிடாத மழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் இரவு முழுவதும் இடைவிடாத பெய்த மழை காரணமாக புதுச்சேரியில் சனிக்கிழமை(ஆக.10) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் இரவு முழுவதும் இடைவிடாத பெய்த மழை காரணமாக புதுச்சேரியில் சனிக்கிழமை(ஆக.10) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாகவே வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது தூறல் மழை பெய்தது. வியாழக்கிழமை இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் புதுச்சேரி கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி மைதான தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல தண்ணீா் தேங்கியது. பல தெருக்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. புதுச்சேரி ஊரகப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.

இதனால் புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து ஆறு குளங்களாக காட்சியளித்தது. குறிப்பாக புஸ்சி வீதி,அண்ணா சாலை,நேரு வீதி, காந்தி வீதி, சாரம், லாஸ்பேட்டை, வெங்கடேஸ்வரா நகர், பாலாஜி நகர்,பூமியான் பேட்டை, ஜவகர் நகர், உள்ளிட்ட நகர பகுதி, அனைத்தும் மழை நீர் சூழ்ந்து ஆறு குளமாக காட்சியளித்தது இதனால் வாகன ஓட்டிகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் மழை விட்டு இரண்டு மணி நேரம் ஆகியும் மழை நீர் விடிய விடிய வடிந்ததால் வாகன ஓட்டிகளும் கடுமையான அவதிக்கு ஆளாகினார்கள். புதுச்சேரியில் அதிக அளவு மழை பெய்தும் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் புதுச்சேரி நகர பகுதி முழுவதும் ஆறு குளங்களாக காட்சி அளித்தது.

வீடுகளில் புகுந்த மழை நீரால் வீட்டில் உள்ள பொருள் சேதமடைந்தது. வீட்டில் புகுந்த நீரை வெளியேற்றுவதற்காக குடியிருப்பு வாசிகள் விடிய விடிய காத்திருந்து மழை நீரை வெளியேற்றிய அவலமும் அரங்கேறியது.

இந்த நிலையில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் புதுச்சேரியில் உள்ள அரசு

பள்ளிகளுக்கு சனிக்கிழமை(ஆக.10) விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிறைவு!

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி - திரளான பக்தர்கள் தரிசனம்..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் துவங்கியது!

SCROLL FOR NEXT