முகப்பு
தமிழ்நாடு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:34 PM
புதுக்கோட்டை திருவப்பூரிலுள்ள முத்துமாரிம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக, ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோயில் கருவறையைத் தாண்டி மண்டபத்திலும் மலைபோல் பூக்கள் குவிந்தன.
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:27 PM

புதுக்கோட்டையின் அம்மன் கோயில்களில் முதன்மையான திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

விடிய விடிய மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பூக்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அதேபோல, பொதுமக்களும் பூத்தட்டுகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:27 PM

மக்கள் கொண்டு வந்த பூக்கள் முத்துமாரியம்மன் கோயில் கருவறை நிரம்பி, முன்மண்டபம் முழுவதும் மலை போலக் குவிந்தன.

Advertisement

காலையில் நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு .அருணா, மேயர் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். குவிந்திருந்த பூக்கள், பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கப்பட்டன.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:27 PM

மாசிப் பெருந்திருவிழாவின் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் மார்ச் 1ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. மார்ச் 9ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மார்ச் 17ஆம் தேதி காப்பு களைதலும், மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது.

summary

Flowers offered to Goddess Muthumariamman at the temple at Tiruvappur in Pudukottai town during Poochorithal festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.