ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா
கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாா்ச் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், குதிரை, சிம்மம் உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டில் உற்ஸவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் நிலைக்கு வந்தபிறகு பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா். பின்னா் கிடாவெட்டும், அம்மன் தடம்பாா்த்தல் நிகழ்வும் நடைபெற்றது.
Advertisement
விழாவில் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். மாலை மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவுபெற்றது.
ஏற்பாடுகளை விழாக் குழுவினரும் இந்துசமய அறநிலையத்துறையினரும் ஆதனக்கோட்டை கிராம மக்களும் செய்திருந்தனா்.