முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில் முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்காவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் செய்யவுள்ளார். இதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
மாநிலத்தில் முதல்வா் இல்லாத சூழலில், எத்தகைய பணிகளை அமைச்சா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.