முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை(பிப்.5) பிற்பகல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது தொடர்பாக...

Updated On : 5 பிப்ரவரி 2026, 9:11 am IST
மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்! - கோப்புப்படம்
பகிர்:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை(பிப்.5) பிற்பகல் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நிகழாண்டுக்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் கடந்த ஜன.20-ஆம் தேதி தொடங்கி ஜன.24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

பிப்.1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளதால் தற்போதைய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும். தோ்தல் முடிந்த பிறகு முழு பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும்.

Advertisement

Advertisement

பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். அதன்படி தமிழக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அறையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது.

இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

summary

A cabinet meeting will be held today under the leadership of Chief Minister M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.