ஹார்ட் பீட் வெப் தொடர். 
தற்போதைய செய்திகள்

நிறைவடைகிறது ஹார்ட் பீட் வெப் தொடர்!

ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹார்ட் பீட் வெப் தொடர் விரைவில் நிறைவடைகிறது.

DIN

ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹார்ட் பீட் வெப் தொடர் விரைவில் நிறைவடைகிறது.

இந்த தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தத் வெப் தொடரை டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த தொடருக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

ஹார்ட் பீட் வெப் தொடர் கடந்த மார்ச் 8 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்களே இத்தொடரின் மையக்கரு.

இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது, இத்தொடர் விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அமசங்களுடனும் சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஹார்ட் பீட் வெப் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளது

இத்தொடர் விரைவில் நிறைவடையுள்ளதால், ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரை நீட்டிக்குமாறு, இத்தொடர் பார்க்கும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT