ரெளடி ரோஹித் ராஜன்.  
தற்போதைய செய்திகள்

காவலர்களை தாக்கிய ரெளடி: சுட்டுப்பிடித்த போலீஸார்!

ரெளடி ரோஹித் ராஜன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.

DIN

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரெளடி ரோஹித் ராஜனை காவல் துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

முன்னதாக, தேனியில் கைது செய்யப்பட்ட ரோஹித் ராஜனை, காவல் துறையினர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ரோஹித் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்க காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, காவலர்கள் இருவரை ரெளடி ரோஹித் அரிவாளால் தாக்கி தப்பியோட முயற்சி செய்துள்ளார். தற்காப்புக்காக, ரோஹித்தை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ரோஹித் ராஜன் காயம் அடைந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோஹித் தாக்கிய இரு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரெளடி ரோஹித் ராஜன் மீது மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கு உள்பட 13 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT