திருமாவளவன் (கோப்புப்படம்) DIN
தற்போதைய செய்திகள்

தலித் முதல்வராக முடியாது: திருமா பேச்சுக்கு வலுக்கும் ஆதரவு!

எந்த சூழலிலும் எந்த காலத்திலும் ஒரு தலித் மாநிலத்தின் முதல்வராக முடியாது.

DIN

தலித் முதல்வராக முடியாது என்று கூறிய திருமாவளவன் பேச்சுக்கு நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அமைந்துள்ளதாகக் கூறி, விசிக தலைவா் தொல். திருமாவளவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் முதல்வராவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக விசிக தலைவா் தொல். திருமாவளவன் பேசியதாவது:

எந்த சூழலிலும் எந்த காலத்திலும் ஒரு தலித் மாநிலத்தின் முதல்வராக முடியாது. திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது. இதை விவாதித்தால் நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், திமுக அரசு என்பது நிலையானது அல்ல, மாநில அரசுதான் நிலையானது. மாநில அரசு எந்த சூழலிலும் ஒரு தலித்தை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கு இல்லை என்று பேசினார்.

இது தொடர்பாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “தலித் முதல்வராக முடியாது என்று தெரிவித்த திருமாவளவன் கருத்தை ஏற்கிறேன். ஆனால் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற கருத்தை எதிர்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தை இரு பெண்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய ராஜ்நாத் சிங்

தமிழக அரசின் விருதுக்கு தஞ்சாவூா் ஆட்சியா் தோ்வு

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT