சென்னை: நாட்டின் 78-ஆவது சுதந்திர நாளையொட்டி, நடிகரும் தவெக தலைவருமான விஜய் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 78-ஆவது சுதந்திர நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை கொத்தளத்தில் தொடா்ந்து 11-ஆவது முறையாக பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி வருகிறார்.
இந்த விழாவில் மாணவா்கள், இளைஞா்கள், விவசாயிகள், பழங்குடியினா், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சுமாா் 6,000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றுள்ளனா்.
2047-க்குள் வளர்ந்த பாரதம் என்ற கருப்பொருளில் நடப்பாண்டு சுதந்திர நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் சுதந்திர நாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!
எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம்! நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம்!
அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துகள் என விஜய் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.