கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கோயில் கொடை விழாவில் தகராறு: அண்ணன், தம்பி குத்திக் கொலை

திசையன்விளை அருகே, கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திக் கொலை செய்யப்பட்டனர்.

DIN

திருநெல்வேலி: திசையன்விளை அருகே, கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திக் கொலை செய்யப்பட்டனர், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே, காரம்பாடு கிராமத்தில் ஓடைக்கரை சுடலைமாடசாமி திருக்கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த கொடை விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகறாறு கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர் மற்றொரு பிரிவைச் சேர்ந்த அண்ணன், தம்பியை கத்தியால் குத்தியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் மகேஷ்வரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் குமரி மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

SCROLL FOR NEXT