முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 20 ஆகஸ்ட், 2024 at 5:04 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 20) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,280-க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ. 53,560-க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை திங்கள்கிழமை எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.6,670-க்கும், சவரன் ரூ.53,360-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,280-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 10 குறைந்து ரூ. 6,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.91-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 குறைந்து ரூ. 91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →