முகப்பு
தற்போதைய செய்திகள்

தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்: நல்வாய்ப்பாக 27 பேர் உயிர்த்தப்பினர்

திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீடீரென தீப்பிடித்து எரிந்ததில் நல்லவாய்ப்பாக பேருந்தில் இருந்த 27 பேரும் உயிர்த்தப்பினர்

Updated On : 23 ஆகஸ்ட் 2024, 9:04 am IST
திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீடீரென தீப்பிடித்து எரிந்ததில் நல்லவாய்ப்பாக பேருந்தில் இருந்த 27 பேரும் உயிர் தப்பினர்.
பகிர்:

திருச்சி: நெல்லை மாவட்டம் திசையன்விளையிலிருந்து 27 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, திருச்சியில் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 27 பேரும் உயிர்த்தப்பினர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்து மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தினை வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.10 மணிக்கு கடந்தபோது, பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து.

இதன் காரணமாக பேருந்தின் பின்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுநர் பேருந்தை மேம்பாலத்தின் மீது சாலையோரமாக நிறுத்திவிட்டு, பேருந்தில் இருந்த 27 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கி உள்ளார். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.

Advertisement

Advertisement

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் சுமார் 2.40 மணிக்கு சம்பவ இடத்து விரைந்து வந்து பேருந்தின் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

பின்னர், மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments