சிறகடிக்க ஆசை தொடர் DIN
தற்போதைய செய்திகள்

முன்னேற்றத்தில் சிறகடிக்க ஆசை தொடர்: இந்த வார டிஆர்பி!

எந்தெந்த தொடர்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

DIN

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் மனதைக் கவர்ந்த சீரியல்கள் டிஆர்பி பட்டியலில் இடம்பிடிக்கின்றன.

இந்த டிஆர்பி பட்டியல் மூலம் மக்கள் எந்தத் தொடரை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர் சென்ற வாரம் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 9.13 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கடந்த வாரம் ஏழாவது இடத்தில் இருந்த விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம் 8.76 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்ற வாரம் 2 ஆம் இடத்தில் இருந்த கயல் தொடர், இந்த வாரம் 8.68 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு, நிறைவடைந்த வானத்தைப் போல தொடர் 8.23 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த வாரம் 3-ஆம் இடத்தைப் பிடித்த மருமகள் தொடர், இந்த வாரம் 8.03 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT