காங்கிரஸ் (கோப்புப்படம்) DIN
தற்போதைய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

9 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

DIN

ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் அங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு நேற்று நிறைவு பெற்றது.

அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங். 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், பாந்தர்ஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 9 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

பாஜக நேற்று 44 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. ஆனால், அடுத்த ஓரிரு மணி நேரங்களில் இந்த பட்டியல் வாபஸ் பெறுவதாக அறிவித்து, அடுத்த சில மணி நேரங்களில் திருத்தப்பட்டப் பட்டியலை பாஜக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! முதல் 15 நிமிட முன்பதிவு ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மி.மீ. மழை பதிவு!

ஃபிடே செஸ்: தமிழக வீராங்கனைக்கு முதல்வா் வாழ்த்து

அண்ணா பிறந்த நாள்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் மரியாதை

SCROLL FOR NEXT