கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தென்காசி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர், 12 பேர் காயமடைந்தனர்.

DIN

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர், 12 பேர் காயமடைந்தனர்.

தென்காசி மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் இருந்து விவசாய வேலைக்காக, புதன்கிழமை காலை ஆனைகுளம் பகுதிக்கு தொழிலாளர்கள் லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர்.

லோடு ஆட்டோ சுரண்டை அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கோ நாய் வந்துள்ளதை அடுத்து ஒட்டுநர் ஆட்டோவை திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் இருந்த ஜானகி(52), வள்ளியம்மாள்(60)ஷ பிச்சி(60) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT